Tuesday, 22 June 2021

அந்த காலத்தில் Double Action இப்படி தான் எடுத்தார்கள்(Dual action in Film roll time Cinema)


 நமக்கு பிடித்த நடிகர்களின் படங்களை பார்ப்பது என்பதே ஒரு தனி சுகம் தான், அதுவும் இரட்டை வேடங்களில் நடித்திருப்பதை பார்ப்பது மிகவும் சந்தோசத்தை கொடுக்கும்.

தொழில்நுட்பம் மிகவும் வளர்ச்சியடைந்துள்ள இந்த காலத்தில் இரட்டை மற்றும் மூன்று வேடங்கள் என இல்லாமல் தசாவதாரம் படத்தில் நம் உலகநாயகன் பத்து கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தியுருப்பார்.

அது மிகப்பெரிய சவாலாக இருந்தாலும் இப்போது உள்ள காலக்கட்டத்தில் அது சாத்தியமாயுற்று.

இதையே நாம் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தோம். ஆனால் தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத அதாவது பிலிம்ரோல் காலத்தில் இது எப்படி சாத்தியமானது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

தமிழ் சினிமாவில் முதலில் வெளியான இரட்டைவேட தமிழ் திரைப்படம் 1940 ல் வெளியான உத்தமபுத்திரன். இதில் நடித்துள்ளவர் பி.யு சின்னப்பா.

இரட்டை கதாப்பாத்திரம் எப்படி அமைப்பது என்பது இப்போது அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் செல்போனில் அதற்க்கான அனைத்து செயலிகளும் உள்ளது. இருப்பினும் அதை ஒரு சிறிய விளக்கமாக பார்க்கலாம்.

இந்த பதிவை வீடியோவாக காண்க

எந்த ஒரு அசைவும் இல்லாத பின்புலத்தை(Background) இரண்டாக பிரித்து கேமராவை நடுநிலையாக வைத்து வெவ்வேறு சமயத்தில் ஒரே காட்சியை எடுத்து அதை சேர்க்கும் பொழுது அது ஒரே சமயத்தில் எடுத்ததை போன்று தெரியும் இப்பொது உள்ள காலத்தில் கம்ப்யூட்டர் செயலிகள் மூலம் இதை சுலபமாக செய்துவிடலாம். இந்த தொழிநுட்பத்தை Split Screen method என்று கூறுவார்.


ஆனால் பிலிம்ரோல் காலங்களில் எப்படி  செய்திருப்பார்கள் என்றால், கணினி இல்லாத காரணத்தால் பிலிம் ரோலை இரண்டாக கைகளால் வெட்டி அதை ஒன்று சேர்த்திருப்பார்கள்.


இப்படி வெட்டிய அடையாளம் தெரியாமல் இருக்க பின்புறம் tape ஐ கொண்டோ ஒட்டி உபயோகித்தார்கள். அந்த காலகட்டத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நடித்த நவராத்திரி படத்தில் அவர் ஒன்பது கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். பிலிம்ரோலை வெட்டி ஒன்று சேர்க்கும் முறையை பயன்படுத்தியிருந்தால் அவர் நடித்த ஒன்பது காட்சிகளையும் எடுத்த ப்லிம்ரோலை வெட்டி சரியாக சேர்த்திருந்தால் மட்டுமே அது அந்த அளவிற்கு சரியாக வந்திருக்கும்.

இந்த இரட்டை கதாப்பாத்திரத்திற்கு இன்னொரு முறையும் உபயோகப்படுத்தப்பட்டது, அது என்னவென்றால் ஒரு நடிகர் போன்றே இருக்கும் இன்னொரு நடிகரை எதிர்புறம் நடிக்க வைத்து அதை இரட்டை வேட காட்சிகளை போன்று நம்மை நம்பவைத்திருப்பார்கள்.

Split Screen முறையில் இரட்டை கதாப்பாத்திரங்கள் கட்டிங் பாயிண்ட்ஸ் தாண்டமுடியாமல் இருந்தது, காரணம் அதை தாண்டினால் அந்த கதாப்பாத்திரம் துண்டிக்கப்படும்.

இதையும் சமாளிக்க ஒரு யுக்தி பயன்படுத்தப்பட்டது. 

இந்த காட்சியில் இரண்டு சிவாஜியும் கைகளை கொடுப்பது போல அமைந்திருக்கும்


 இது எப்படி எடுத்திருப்பார்கள் என்றால் கொஞ்சம் உற்று பார்த்தால் தெரியும் இந்த காட்சியில் சிவாஜியின் தோள்பட்டையில் தான் கட்டிங் பாயிண்ட் இருக்கும், அந்த கதாப்பாத்திரத்தின்  டூப் யை வைத்து அந்த காட்சியில் கையை கொடுப்பது போல நடிக்க வைத்து தோள்பட்டையை மட்டும் வெட்டி பின்பு சேர்த்திருப்பார்கள்.


இப்படி தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத காலத்திலேயே மிகவும் நுட்பமாக நம் கண்களை ஏமாற்றி  சில காட்சிகளை அமைத்திருப்பார்கள்.

அதற்க்கு பின் வந்த காலங்களில் படத்தொகுப்பு கணினி மூலம் செய்ய ஆரம்பித்த பிறகு chrome key எனப்படும் தொழில்நுட்பம் வந்தது.

என்னடா சொல்லுறீங்க Animation கற்காலத்துல ஆரம்பிச்சிடங்களா??

அதன்படி பச்சை திரையின் முன் நடிகர்களை நடிக்க வைத்து பின்புறத்தை சுலபமாக மாற்ற முடிந்தது. எதற்க்காக பச்சை நிறம் என்றால் நம் உடம்பில் இல்லாத நிறம் பச்சை மற்றும் நீலம். எனவே வேறு நிறம் உபயோகித்தால் நடிகர்களும் சேர்ந்து Cut செய்யபடுவர்.

Splits screen முறை போன்று இல்லாமல் இதில் திரையில் எங்கு வேண்டுமானாலும் நகர்த்த முடிந்தது. எனவே மக்களை இன்னும் உறுதியாக இரட்டை வேடங்களாக நம்பவைக்க முடிந்தது.

மாற்றான் இதில் வரும் இந்த காட்சி எப்படி எடுத்திருப்பார்கள் என்றால், பழைய முறையான Body Dupe தான். சூர்யா போன்று இன்னொருவரை நடிக்கவைத்து.


அதன் பின்பு இன்னோர் சூர்யாவின் முக பாவனையை மட்டும் காமெராவில் எடுத்து. அவர் தலையை மட்டும் Cut செய்து பொருத்துவார்கள். இதை பொறுத்த Match Move என்ற தொழில்நுட்பம் உதவுகிறது.

இந்த பதிவு பிடித்திருந்தால் இதை பகிரவும்.


ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட Hollywood படங்கள் (Best One Location Hollywood Movies)

  HOLLYWOOD MOVIES இதை பற்றி பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன, அவர்களுடைய திரைக்கதை, திட்டமிடுதல், தொழில்நுட்பம், புதுமை (Script,Creativit...