Thursday, 1 April 2021

கோபமூட்டக்கூடிய எதிர்மறையான கதாப்பாத்திரங்கள் (Best Negative Character in Tamil Cinema)


திரைப்படங்களில் கதை எவ்வளவு முக்கியமோ, அதை போல அந்த கதையை தாங்கி நிற்கின்ற கதாபாத்திரமும் முக்கியம். இந்த கதாபாத்திரங்களை சரியாக வடிவமைத்தால் தான், அந்த கதையின் ஆழத்தை ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்க முடியும்.  

சினிமாக்களில் வில்லன் கதாப்பாத்திரத்தையும் தாண்டி எதிர்மறையாக  நம்மை கோபமூட்டக்கூடிய சில கதாப்பாத்திரங்கள் இருக்கும் அதாவது அந்த கதாப்பாத்திரம் திரையில் வந்தாலே நமக்குள் ஒரு எரிச்சல், கோபம். ஒருவிதமான பயமும் தோன்றும்.அப்படிப்பட்ட கதாப்பாத்திரங்கள் பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கணபதி ராம்


     பேராண்மை(Peranmai Tamil Movie) படத்தில் வரும் இந்த கதாப்பாத்திரத்தில் பொன்வண்ணன் நடித்திருப்பார். மலைவாழ் மக்களிடம் அவர் நடந்துக்கொள்ளும் விதம்  ஹீரோவான ஜெயம் ரவியை (Actor Jayam Ravi)நடத்தும் முறையும் நம்மை கோபமூட்டக்கூடியதாக அமைந்திருக்கும்.அதிலும் உச்சக்கட்டமாக மலைவாழ் மக்களை அடிக்கு காட்சி மற்றும் Climax காட்சியில் அனைத்து தீவிரவாதிகளையும் தான் தான் கண்டுபிடித்ததாக கூறி மேடையில் விருது வாங்கும் காட்சிகள் மிகவும் கோபமூட்டகூடியதாக இருக்கும்.

சுதா


மைனா (Myna tamil movie) படத்தில் வரும் இந்த கதாப்பாத்திரத்தில் சூசன்(Suzane George)காவல் அதிகாரியின் மனைவியாக  நடித்திருப்பார். படத்தின் ஆரம்பத்தில் இருந்தே   கணவரிடம் கோபப்படும் காட்சியும்,  ஹீரோயினான அமலாபாலிடம் சந்தேகத்தில் பேசும் தகாத வார்த்தைகளும் இப்படி அந்த கதாப்பாத்திரத்தில் மிகவும் பொருத்தமாக நடித்து நம்மை எரிச்சலடைய  செய்திருப்பார். இப்படத்தில் பிரதான வில்லன் இல்லாத நிலையிலும், இந்த கதாபாத்திரம் சிறிது நேரம் வந்தாலும், கதையின் போக்கை திருப்பி போட்டு ஒரு கதாபாத்திரம்.

கோவிந்தன்



இளைய தளபதி( Actor Vijay) விஜய் நடிப்பில் வந்த போக்கிரி (Pokkiri Tamil Movie) படத்தில் வரும் இன்ஸ்பெக்டர் கோவிந்தன்.  இந்த கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள முகேஷ் திவாரி(Actor Mukesh Tiwari) அசினிடம் வலியும் காட்சி மற்றும் வீட்டிற்கு சென்று மிரட்டும் காட்சிகள் அதிலும் வாயில் பாக்கை போட்டுகொண்டு பேசும்போது  இப்படி நம்மை எரிச்சல் அடையை செய்திருக்கும்  இந்த கதாப்பாத்திரம்.

 விஸ்வேஸ்வர ராவ்


 விசாரணை(Visaranai movie) படத்தில் வரும் இந்த கதாப்பாத்திரத்தில் நடித்தவர் அஜய் கோஷ் (Actor Ajay Ghosh) இவருடைய அறிமுக காட்சியில், மிகவும் நல்ல காவல் அதிகாரி போல் தோன்ற வைத்திருப்பார்கள், ஆனால் அதன் பின்பு தான் இவரின் உண்மை முகம் தெரியும்.

ஆந்திரா போலீஸ் ஆன இவர், செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள  தமிழ்நாட்டை சேர்ந்த   ஹீரோவான தினேஷை அடிக்கும் காட்சிகளில் நாமே அங்கு நின்று அடி வாங்குவது போல் தோன்றும் அந்த அளவிற்கு மோசமாகவும் பயமாகவும் இருக்கும். மிகவும் அழுத்தமாக வடிவமைத்திருப்பர் இயக்குனர் வெற்றிமாறன்.

சுப்பு ராஜ்


மிக மிக அவசரம் என்ற படத்தில் வரும் (Miga Miga Avasaram Tamil Movie) இந்த கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நம் வழக்கு என் முத்துராமன்.இந்த படத்தில் வரும் காட்சிகளில் இப்படிகூட ஒரு பெண்ணை பழிவாங்குவார்களா என்று தோன்றும். ஹீரோயின்னை கஷ்டப்படுத்தும் காட்சியும் அதை பார்த்து ரசிக்கும் தோரணையும் எரிச்சலூட்ட செய்யும். சில நேரங்களில் நாமே அந்த நிலையில் நிற்பது போல உணரவைத்து இருப்பார்கள்.

பாண்டி



அசுரன் படத்தில் வரும் இந்த பாத்திரத்தில் நடித்தவர் நிதிஷ் வீரா(Actor Nithish Veera).ஹீரோவான தனுஷ் ரொம்ப ஏழ்மையில் இருக்கும் பாண்டியை தன் முதலாளியிடம், ஒரு சிறு வேலையில் சேர்த்து விடுகிறார். பாண்டியும், முதலாளியும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பாண்டி முதலாளியுடன் நெருக்கமாக பழகி, அவரிடமே ஒரு கௌரவமான பதவிக்கு  முன்னேறுகிறான். அதன்பின் தனக்கு உதவி செய்தவன் என்று பார்க்காமல் தனுஷையும் அவர் சமூகத்தைச்  செர்தவர்களையும், தரக்குறைவாக பேசுவார். இதற்கெல்லாம் மேலாக தன்னைவிட கீழ் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் கதாநாயகியான மாரியம்மாலை செருப்பு அணிந்து ஊருக்குள் வந்ததால், அவளுடைய செருப்பை அவள் தலையில் வைத்து நடந்து செல்ல சொல்லும்போதும், மாரியம்மாளை எட்டி உதைக்கும்போதும், அந்த கதாபாத்திரம் பார்ப்பவரை எரிச்சல், மற்றும் கோவம் அடையை செய்கிறது.   

 இன்பராஜ் 

ஒரு கண்டிப்பான ஆசிரியராக  இந்த கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளவர் வினோத் சாகர்(Actor Vinoth Sagar) இதுபோல கண்டிப்பான ஆசிரியர் எல்லாருடைய வாழ்க்கையிலும் பார்த்திருப்போம். ஆனால் இவருடைய இன்னொரு முகத்தை பார்த்தபிறகு  வில்லனை பார்த்து பயந்ததை விட இந்த ஆசிரியர் கதாப்பாத்திரத்தை பார்க்கும் பொழுது தான் அனைத்து பெற்றோர்களுக்கும் ஒருவித பயமும் நடுக்கமும் வந்திருக்கும். அந்த அளவிற்கு அழுத்தமாக இந்த கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பார் இயக்குனர் ராம்குமார்(Director Ramkuamr)

கருங்காலி என்கிற பவுனு


அங்காடி தெரு படத்தில் வரும் இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் வெங்கடேஷ்(Actor Venkatesh) கிராமத்தில் இருந்த தனது படிப்பை விட்டு வேலைதேடி வருபவர்களை, அப்படி வந்து வேலை செய்யனுமா என்று  சிறிது யோசிக்க வைத்திருக்கும், தனக்கு கீழே வேலைசெய்பர்வர்களுக்கு என்னவெல்லாம் செய்ய கூடாதோ அது அனைத்தையும் இந்த காதாபாத்திரம் செய்து நம்மை மிகவும் பயமுறுத்திய கதாபாத்திரம்.

பரியேரும் பெருமாள் தாத்தா



இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் கராதே வெங்கடேசன்(Actor Karate Venkatesan.  வில்லன் கதாப்பாத்திரத்தையே தூக்கி சாப்பிடக்கூடிய ஒரு கதாப்பாத்திரம். ஆனால் வில்லன் செய்கின்ற எதையும் இவர் செய்யமாட்டார். கோவமாக வசனம் பேசுவதோ,அடி,உதை, சண்டை இப்படி எதுவும் கிடையாது, ஆனால் இவர் வரும் காட்சிகளில் அடுத்து என்ன செய்ய போகிறாரோ என்று பயம் வரும், அந்த அளவுக்கு இந்த கதாபாத்திரத்தை தத்ரூபமாக வடிவமைதிருபார் இயக்குனர் (Director Mari Selvaraj) ஆரம்ப காலகட்ட சினிமாவில் தெரியவில்லை ஆனால், தற்போது உள்ள சினிமா காலகட்டத்தில் இது போன்ற கதாப்பாத்திரத்தை எந்த படத்திலும் பார்க்க முடியாது.

இந்த பதிவு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கு பகிருங்கள், எங்கள் பக்கத்தை பின்தொடரவும்.

கல்லை கூட நடிக்க வைக்கும் சினிமா, இங்கு உயிரற்ற பொருளும் கதாபாத்திரமே


No comments:

Post a Comment

ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட Hollywood படங்கள் (Best One Location Hollywood Movies)

  HOLLYWOOD MOVIES இதை பற்றி பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன, அவர்களுடைய திரைக்கதை, திட்டமிடுதல், தொழில்நுட்பம், புதுமை (Script,Creativit...