Friday, 5 March 2021

ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட Hollywood படங்கள் (Best One Location Hollywood Movies)

 
HOLLYWOOD MOVIES இதை பற்றி பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன, அவர்களுடைய திரைக்கதை, திட்டமிடுதல், தொழில்நுட்பம், புதுமை (Script,Creativity,Technology,Planning ect.,)  இதை போல நிறைய விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.  இதை பற்றி அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

இன்று நாம் பார்க்கபோவது ஒரே LOCATION ல் எடுக்கப்பட்ட படங்கள். அதாவது படத்தின் முக்கிய கதை ஒரே LOCATION ல் எடுக்கப்பட்டதாக இருக்கும். ஹாலிவுட் ல் இது போன்ற படங்கள் பல இருக்கிறது. அதில் ஐந்து முக்கிய படங்களை பற்றி இன்று பார்க்கலாம்.


PANIC ROOM



இந்த படம் 2002 ல் வெளியானது. PANICROOM அதாவது ஒரு SAFTYROOM(பாதுகாப்பு அறை). வெளிநாடுகளில் ஒழிந்து கொள்வதற்கு முக்கியமாக திருட வருபவர்கள், தீவிரவாதிகள், கொள்ளையடிக்க வருபவர்கள் இவர்களிடமிருந்து தங்களை  பாதுகாத்து கொள்ளவும் அதிக விலை உள்ள பொருட்களை  மறைத்து வைக்கவும் இந்த ரகசிய அறைய பயன்படுத்தபடுகிறது..

இதை மைய்யபடுத்தி தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.. இதே போல தன்னுடைய வீட்டில் திருட வரும் மூன்று திருடர்களிடமிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள ஒரு அம்மாவும் மகளும் இந்த (PANICROOM) பாதுகாப்பு அறைக்குள் ஒழிந்துகொள்கிறார்கள், ஆனால் திருடவந்தவர்களுக்கு தேவையான அந்த பொருள் அந்த அறைக்குள் தான் உள்ளது. 




எப்படி  அவர்கள் அந்த அறைக்கு சென்று அந்த பொருளை எடுகிறார்கள், அந்த அம்மாவும் மகளும் தங்களை காப்பாற்றிக்கொள்ள என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை.

 இந்த படத்துடைய கதை அனைத்துமே இந்த வீடு இந்த அறை இதற்குள்ளேயே  தான் எடுத்திருப்பார்கள் , பல பேர் இந்த படத்தை பார்த்து ரசித்திருப்பீர்கள். பார்க்காதவர்கள் கண்டிப்பா பார்க்கவும்.


ESCAPE ROOM




    இந்த படம் 2019 ல வெளியான ஒரு  Psychological horror மற்றும் Thriller படம். இந்த படம் ஒரு Puzzle GAME மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டை விளையாட சம்பந்தம் இல்லாத ஆறு பேருக்கு Invitation போகிறது. இந்த ஆறு பேரும் ஒரு அறையுனுள்  வந்து காத்துகொண்டு இருப்பார்கள்.இந்த விளையாட்டை பத்தி பேசிகொண்டு இருபார்கள். அப்படி   அவர்கள் பேசிகொண்டு இருக்கும் போதுதான் தெரியவருகிறது அந்த விளையாட்டு ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது என்று. அந்த அறை திடீருன்னு சூடாக ஆரம்பிக்கிறது , அதுலிருந்து வெளியுள் செல்ல ஒருசில CLU மாதிரியான விசயங்கள் அங்கு இருக்கும் அதை  கண்டுபிடித்து எப்படி வெளியே  செல்கிறார்கள்.




தொடர்ந்து அடுத்தடுத்து வரும் அறைகளிலும் அவர்களுக்கு பிரச்னை வருகிறது, அதற்க்கான CLU ம் கிடைக்கிறது. அதை  கண்டுபிடித்து எப்புடி வெளியே செல்கிறார்கள், யார் இந்த பரிசை அடையுறாங்க என்பதுதான் இந்த படத்தின் கதை.


இந்த  விடியோவை காண link ஐ click செய்யவும் 

EXAM



 இந்த படம் 2009ல் வெளியான படம். இது ஒரு Psychological Thriller படம். ஒரு கம்பெனி வேலைக்காக ஒரு EXAM வைக்கப்படுது, அதை எழுத எட்டு பேர் ஒரு அறைக்குள் போகிறார்கள். அங்கு தனித்தனி டேபிளில் ஒன்றில் இருந்து எட்டு வரை நம்பர் அச்சிடப்பட்ட விடைத்தாள் வைக்கப்பட்டுள்ளது. Exam கண்காணிப்பவர் ஒரு செக்யூரிட்டியோடு உள்ளே  வந்து Exam விதிமுறை பற்றி கூறுகிறார்.

 இந்த EXAM ல் ஒரு கேள்விக்கு மட்டுமே பதில் அளிக்க வேண்டும் அதற்க்கான நேரம் என்பது மணி நேரம். மூன்று விதிமுறைகளும் கொடுக்கபடுகிறது, அதில் ஏதேனும் ஒன்றை மீறினாலும் இந்த EXAM ல் இருந்து அவர் விலக்கிக்கொள்ளபடுவார் என்று சொல்லிவிட்டு அவர் வெளியே செல்கிறார்.




அங்கிருந்து பரிட்சைக்காண நேரம் தொடங்குகிறது. அனைவரும் விடைத்தாளை பிரித்து பார்கின்றனர், அதில் எந்த கேள்வியும் இல்லாமல் காலியாக உள்ளது. அவர்கள் எப்படி கேள்விய கண்டுபிடித்து பதில் அளிக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படம் முழுவதும் இந்த பரீட்சை அறைக்குள் மட்டுமே எடுக்கபட்டிருக்கும்.


127 HOURS



  இந்த படம் 2010 ல் வெளியான ஒரு ADVENTURE சம்பந்தப்பட்ட படம், ஒரு உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட படம். கதைப்படி ஹீரோ ஒரு MOUNTINE CLAIMER.  அதாவது மலை ஏறுதல், காட்டு பகுதியில் பயணம் செய்தல்  இது போன்ற செயலில் ஈடுபடுபவர். அப்படி ஒரு நாள் ஹீரோ செல்லும் பொழுது பள்ளத்தாக்குகளில் இறங்கும் பொழுது தடுக்கி கீழே விழுகிறார், அப்படி விழும்போது  பெரிய பாறை ஒன்று அவர் கையின் மீது விழுந்து அங்கேயே சிக்கி கொள்கிறார்.




 அந்த வறண்ட மலை பகுதியில் யாரும் உதவிக்கு வராத நிலையில் அங்கேயே
127 மணி நேரம் மாட்டிகொண்டு தப்பிக்க முயர்ச்சிகிறார், இதுதான் இந்த படத்தின் கதை. இந்த படம் முழுவதும் அவர் மாட்டிகொண்ட அந்த இடத்துலேயே தான் எடுக்கப்பட்டு இருக்கும்.


BURIED



 இந்த படம் 2010 வெளியான PSYCHOLOGICAL THRILLER படம். படம் தொடங்கும் பொழுதே ஹீரோ ஒரு மரபெட்டியில் அடைக்கப்பட்டு இருப்பார். அவரிடம் TORCH, செல்போன் போன்று சில பொருட்கள் இருக்கும். அவரை வெளியே விடவேண்டும் என்றால் 5 மில்லியன் டால்லர்ஸ் வேண்டும் என்று ஒரு சிலர் கோரிக்கை வைக்கின்றனர். அமெரிக்கரான ஹீரோ ஈராக் ல் வந்து TRUCK டிரைவராக வேலை செய்துவருவார், அதனால் அமெரிக்க கம்பெனி இவருக்கு உதவ முன் வராத நிலையில் இறுதியாக ஹீரோ அங்கிருந்து தப்பித்து செல்கிறாரா? இல்லையா? என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படம் முழுவதும் இந்த சவபெட்டியில் தான் எடுக்கப்பட்டிருக்கும். இது ஒரு நல்ல திரைகதை கண்டிப்பாக பார்க்கவும்.


இந்த  விடியோவை காண link ஐ click செய்யவும்

1 comment:

ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட Hollywood படங்கள் (Best One Location Hollywood Movies)

  HOLLYWOOD MOVIES இதை பற்றி பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன, அவர்களுடைய திரைக்கதை, திட்டமிடுதல், தொழில்நுட்பம், புதுமை (Script,Creativit...