Wednesday, 3 March 2021

தமிழ் சினிமாவின் தயாரிப்பு நிறுவனங்கள் (Tamil Film Production House)

 

இந்த டிஜிட்டல் காலத்தில் என்னதான் படங்களை சாட்டிலைட் சேனல் OTT  பிளாட்பார்ம் ஹோம் தியேட்டரில் பார்பதை விட தியேட்டரில்  அதுவும் அந்த 300 400 பேறுடன் சேர்ந்து பார்க்கிற உணர்வே தனிதான்.

இன்றைக்கு இந்த பதிவில் நாம் பார்க்க போகும் இந்த விஷயம்  தான் நாம் தியேட்டருக்கு உள்ளே  இருக்கின்ற நம்மை படத்திற்குள்  கொண்டு செல்கிற ஒரு முக்கியமான விஷயம்.

வாழ்க்கையில் நாம் நிறைய வரிசையிலும், கூட்டத்திலும் எரிச்சலுடன் நின்றிருப்போம் ஆனால் இந்த சினிமா டிக்கெட் வாங்க நிற்கும்போது மட்டும் தான் ஒரு தனி சந்தோஷம்.

அடித்து பிடித்து  டிக்கெட் வாங்கி தியேட்டருக்குள் சென்றால் காற்றுவாக்கில் பாப்கான் வாசமும் பப்ஸ் வாசனையும் அடிக்கும்.

அப்பொழுதே நாம் முடிவு செய்துவிடுவோம் இடைவேளையில் இதை  வாங்கவேண்டும் என்று, அதிலும் சிலபேர் இடைவேளையில் கிடைக்காது என்று முன்பே ஒரு பார்சல் செய்துவிட்டு தியேட்டர் கதவு அருகில் சென்றால் டிக்கெட் கிழிப்பவர் என்னவோ அவர்தான் தியேட்டருக்கு ஓனர் போல கிழித்து கொடுப்பார், அதை வாங்கிட்டு அப்படியே தியேட்டற்குள் சென்று அமர்ந்து விட அப்பொழுது தான் நமக்கு பிடிக்காத ஒரு சில விளம்பரங்களை போட்டு விளக்கை  அனைப்பார்கள். 

  புகைபிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும், மற்றும் உயிரகொள்ளும் என்ற ஆடியோவரும் அது முடிந்ததும்  மிகவும் பிரம்மாண்டமாக ஒரு சத்தம் வரும், அதுதான் ப்ரோடக்சன் ஹவுஸ் சவுண்ட். 



அந்த புரோடக்சன் ஹவுஸ் பற்றி  தான் இந்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். 




ஜெமினி ஸ்டூடியோஸ்(Gemini Studios) 


இதை சிறு வயதிலிருந்தே நிறைய படத்தில் நாம் பார்த்திருப்போம். இதனுடைய நிறுவனர் (FOUNDER) எஸ் எஸ் வாசன். இவர்களுடைய முதல் படம் மதனகாமராஜன் 1941  வெளியானது. 

சென்னை ஜெமினி ஸ்டூடியோஸ் அருகில் கட்டியதால் தான் அண்ணா FLYOVER யை ஜெமினி FLYOVER(Gemini Bridge) என்று அழைக்கிறார்கள். 

அன்று ஜெமினி ஸ்டூடியூவாக இருந்து இப்பொழுது ஜெமினி பிலிம் சர்க்யூட்(Gemini Film circuit) என்று மாறியது. இவர்கள் கடைசியாக எடுத்த படம் கடல். இது மணிரத்தினம் அவர்களுடன் சேர்த்து இவர்கள் தயாரித்த படம்.

ஏவிஎம்(AVM)



ஏ வி மெய்யப்பச் செட்டியார் இவரை தமிழ் சினிமாவில் தெரியாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம். இவரால் உருவாக்கப்பட்டதுதான் ஏவிஎம் ஸ்டுடியோ. ஏவிஎம் ஸ்டுடியோ தமிழ், தெலுங்கு, மலையாளம் என நிறைய படங்களை தயாரித்து உள்ளனர்.

இவர்களுடைய முதல் தமிழ் படம் நாம் இருவர். பராசக்தி படம் மூலமாக நடிகர் திலகம் சிவாஜி அவர்களை அறிமுகப்படுத்தியது இவர்கள்தான், நம்ம உலக நாயகன் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று களத்தூர் கண்ணம்மாவில் இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தியதும் இவர்கள் தான்.


தேனாண்டாள் பிலிம்ஸ் (Thenandal Studios Limited (TSL))

இதனுடைய நிறுவனர் ராமநாராயணன். எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்குமே, நிறைய அம்மன் படங்களை இவர்கள் தயாரித்து இருக்கின்றனர். இவர்கள் எடுத்த முதல் தமிழ் படம் நாகம். 

இது 1975 வெளியானது.  சாமி படங்களை தயாரித்து வந்தவர்கள் அதற்க்கு எதிர்மறையாக அரண்மனை, காஞ்சனா, டிமாண்டி காலனி போன்ற பேய் படங்களுக்கு வெளியிட்டாளர்கள் ஆகவும் இருந்திருக்கின்றனர். சமீபமாக நம்ம இளைய தளபதியுடைய மெர்சல் படம் இவர்களுடைய தயாரிப்பில் தான் வந்தது.

ஆஸ்கார் பிலிம் (Aascar Films) 


இதனுடைய FOUNDAR V.ரவிச்சந்திரன். இவர்களுடைய முதல் படம் காதலுக்கு மரியாதை. இதில் துணை தயாரிப்பாளராக பணியாற்றியிருப்பார். வானத்தை போலே,பூவே உனக்காக போன்ற குடும்ப படங்களை தயாரித்து வந்த இவர்கள் சமீபமாக தசாவதாரம் அந்நியன், ஐ, விஸ்வரூபம் 2 போன்ற படங்களை தயாரித்து உள்ளனர்.

மாடர்ன் தியேட்டர் (Modern Theatres)

இதனுடைய நிறுவனர் வி.ஆர் சுந்தரம் முதலியார். இவர்கள் சமீபகாலமாக படங்கள் எடுக்கவில்லை என்றாலும் முதல் தமிழ் ரெட்டை வேட(Double Action) படம் உத்தமபுத்திரன் இவர்களுடைய தயாரிப்பில்  வந்ததுதான். 

அதேபோல தமிழில் வெளியான முதல் கலர் படம் அலிபாபாவும் 40 திருடர்களும் இதுவும் இவர்கள் தயாரிப்பில் வந்ததுதான்.



ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் (Raaj kamal Film international)


இவங்களோட முதல் படம் 1081 ல்  வெளியான ராஜபார்வை. தேவர்மகன், சதிலீலாவதி,அபூர்வசகோதர்கள் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இவர்கள் தயாரித்து இருக்கின்றனர். சமீபமாக இவர்கள் தயாரித்து வெளியான படம் கடாரம் கொண்டான்.

சன் பிக்சர்ஸ்(Sun Pictures)


இதனுடைய நிறுவனர் கலாநிதிமாறன். ஆரம்ப காலத்தில் நிறைய படங்களைக்கு விநியோகஸ்தராக(Distributor) இருந்திருக்கிறார் . தமிழ் படங்களில் அதிக பட்ஜெட் படமான எந்திரன் இவர்களில் தயாரிப்பில் வெளியானது. சர்கார், பேட்ட போன்ற வெற்றி படங்களை இவர்கள் தயாரித்து உள்ளனர். தலைவரோட அண்ணாத்த யும் தளபதியோட 65 ம் இவர்கள் தயாரிப்பில் வெளியாக உள்ளது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் (Redgiant Movies)


அடுத்து நாம பார்க்க போறது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இதனோட முதல் படம் குருவி 2008 வெளியானது.ஆரம்பத்தில்  மன்மதன் அன்பு, ஏழாம் அறிவு இப்படி பல ஹீரோக்களை வைத்து படம் எடுத்து வந்த இவர் அதற்க்கு பிறகு தானே இறங்கி பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

V CREATION 


இதனுடைய FOUNDAR கலைபுலி S தானு. காக்க காக்க, கிழக்கு சீமையிலே,ஆளவந்தான் சமீபமாக துப்பாக்கி,தெறி, கபாலி போன்ற வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்டனர். கடைசியாக இவர்கள் தயாரிப்பில் வெளிவந்த படம் அசுரன்.

ஸ்டுடியோ கிரீன் (Studio Green)


 இதனுடைய நிறுவனர் KE ஞானவேல்ராஜா.இவர் நடிகர் சிவகுமார் அவருடைய உறவினர். இவர்களின் முதல் படம் சில்லுனு ஒரு காதல்  2006ல் வெளியானது. சூர்யா கார்த்திக் இவர்களை வைத்து நிறைய படங்களை தயாரித்து உள்ளனர். குறிப்பாக சிங்கம்,பிரியாணி, மெட்ராஸ், கொம்பன், தற்போது திரைக்கு வரபோகின்ற நடிகர் சூர்யா படமான அருவாள் இவர்களுடைய தயாரிப்பில் தான் உருவாகிக்கொண்டிருக்கிறது. 

Click here to watch Video

சிலபேர் எனக்கு பிடித்த தயாரிப்பு நிறுவனம் வரவில்லையே, என்று நீங்கள் என்னலாம், இதனுடை மற்றொரு பகுதி வரவிருக்கும் கட்டுரையில் பார்ப்போம்.



No comments:

Post a Comment

ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட Hollywood படங்கள் (Best One Location Hollywood Movies)

  HOLLYWOOD MOVIES இதை பற்றி பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன, அவர்களுடைய திரைக்கதை, திட்டமிடுதல், தொழில்நுட்பம், புதுமை (Script,Creativit...