The Impossible
இந்த படம் 2012 வெளியானது. MARIYA BELANA அவர்களுடைய வாழ்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஹீரோ தன்னுடைய மனைவி இரண்டு குழந்தைகளோடு தாய்லாந்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்குகிறார்கள்.
அடுத்த இரண்டு நாட்களில் அந்த சொகுசு விடுதியில் சுனாமி பேரலை தாக்குகிறது. அப்பொழுது ஹீரோயின் மரியா மற்றும் அவர்களின் முதல் மகனும் பேரலையில் சிக்கி ஒருசில காயங்களுடன் தப்பித்து ஒரு மரத்தின் மேல் ஏறி அங்கிருந்து ஒருசிலரின் உதவியுடன் மருத்துவமனைக்கு செல்கின்றனர். ஹீரோவும் அவர்களின் மற்ற இரு குழந்தைகளும் வேறு வேறு இடங்களுக்கு சென்று மாட்டிக்கொள்கிறார்கள்.
இறுதியாக இவர்களுக்கு என்ன நடக்கிறது
இந்த குடும்பம் ஒன்றாக சேர்கிறதா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை.
Sinister
இந்த படம் 2012 ல் வெளியான ஒரு பேய் படம். உண்மை சம்பவங்களை கதையாக எழுதக்கூடிய ஹீரோ தன்னுடைய கதை பற்றிய தேடலுக்காக ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு சென்று தங்குகிறார்.
அந்த வீட்டில் ஏற்கனவே வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தை யாரோ மரத்தில் தூக்கு போடவைத்து கொன்றிருப்பார்கள். அதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள அதே வீட்டில் ஹீரோ தன் குடும்பத்தோடு தங்கியுருப்பார்.
அந்த வீட்டின் மெத்தையில் ஒரு மூவி
PROJECTER ம் நான்கு ரீல்ஸ் ம கிடைகிறது. அதை போட்டு பார்க்கும் பொழுது ஏற்கனவே
அந்த வீட்டில் தங்கியிருந்த பல குடும்பங்களை யாரோ கொன்று அதை வீடியோவாக எடுத்து
வைத்திருப்பார்கள்.
இறுதியில் இவருடைய குடும்பமும் அதே
பிரச்னையில் சிக்கி கொள்கிறார்கள். இதை அனைத்தையும் செய்யும் நபர் யார்? இந்த
கும்பத்திற்கு என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை.
No Escape
இது 2015 ல் வெளியான Action மற்றும் Thriller படம். அமெரிக்கரான ஹீரோ ஒரு கம்பெனியில் சேர்வதற்கு கிழக்கு ஆசியா நாட்டிற்கு தன் குடும்பத்துடன் செல்கிறார். அன்றைக்கு இரவே அந்நாட்டின் பிரதமர் சில அரசியல் காரணங்களுக்காக கலவரகாரர்களால் கொல்லபடுகிறார்.
மறுநாள் காலையில் கடைவீதிக்கு செல்லும் பொழுது
போலீஸ் க்கும் கலவரக்காரர்களுக்கும் இடையே நடக்கும் பிரச்சனையில் ஹீரோ
மாட்டிகொல்கிறார். அங்கிருந்து தப்பித்து விடுதிக்கு வந்து பார்க்கும்பொழுது அங்கு
சிலர் ஹோட்டலுக்குள் இருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்களை வெளியே இழுத்து சென்று
கொடூரமாக சுட்டு கொள்கின்றனர்.
இந்த கலவரத்திலிருந்து தன்னுடைய குடும்பத்தை
எப்படி காப்பாற்றுகிறார், அந்நாட்டின் எல்லையை கடந்து ஒரு பாதுகாப்பான இடத்திற்கு
எப்படி தன் குடும்பத்தை கொண்டு சேர்க்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.
இதை பதிவை விடியோவாக YouTubeயில் பார்க்க...
A Quiet Place
இப்படம் 2018 ல் வெளியான Science Fiction மற்றும் பேய் படம். படத்தின் ஆரம்பத்தில் ஹீரோ தன் குடும்பத்துடன் ஒரு சூப்பர் மார்கெட்டிற்குள் தங்களுக்கு தேவையான பொருட்களை துளியளவு சத்தமும்மின்றி மெதுவாக பயத்துடன் எடுத்து கொண்டிருக்கிறார்.
பின்பு
எந்தவித சத்தமும் இல்லாமல் ஒருவர் பின் ஒருவராக வீட்டிற்கு சென்று
கொண்டிருக்கும் பொழுது திடீரென ஒரு சத்தம் எழுகிறது, அது என்னவேன்றால் அவர்களின்
கடைசி மகனான சிறுவன் ஒரு பொம்மையை சத்தமிட செய்கிறான், அதை கேட்ட அதிர்ச்சியில்
அவன் தந்தை வேகமாக ஓடிசென்று அக்குழந்தையைக் காப்பாற்ற முயற்சிக்கையில் ஒரு கொடிய
மிருகம் திடீரென வந்து அக்குழந்தையை தூக்கி செல்கிறது.
ஒரு சிறய சத்தம் போட்டாலும் ஒரு மிருகம் நம்மை தாக்கும் என்பதுதான் இப்படத்தின் கதை. இதில் கொடுமை என்னவென்றால் கதையில் ஹீரோயின் கர்பமாக இருப்பாள், எப்படி தன் பிரசவ நேரத்தை சமாளிக்கிறாள், தன் குழந்தைகளை எப்படி இந்த மிருகத்திடமிருந்து காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை.
Bird Box
இது 2018 ல் வெளியான படம். படத்தின் ஆரம்பத்தில் ஹீரோயின் தன்னுடைய இரு குழந்தைகளிடம் ஒரு இடத்திற்கு ஆற்று வழிபாதையில் செல்வதாக கூறி ஒருசில அறிவுரைகளை சொல்கிறாள். அது என்னவென்றால் அந்த இடத்தை சென்று அடையும் வரை நம் மூவரின் கண்களும் கட்டபட்டிருக்கும் எக்காரனத்தைகொண்டும் கட்டை திறக்க கூடாது, அப்படி திறந்தாள் இறந்திவிடுவோம் என்று கூறுகிறாள்.
இதை தொடர்ந்து மூவரும் ஒரு படகில் ஏறி ஆறு வழியாக செல்கின்றனர்.
இதற்கிடையில் ஐந்து வருடத்திற்கு முன்பு என்று ஒரு கதை தொடர்கிறது, அதில் ஹீரோயின்
கர்பமாக இருக்கிறாள், தன் அக்காவுடன் மருத்துவமனைக்கு சென்று திரும்பி
வரும்வழியில் அந்த ஊரில் ஒரு அமானுசிய நோய் ஒன்று பரவி வருகிறது. அது என்னவென்றால் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர் மற்றவரை பார்க்கும் தன்னை தானே தற்கொலை செய்துகொள்வார். அதில் அவள் அக்கா
இறந்து விடுகிறாள்.
அதிலிருந்து தப்பித்து ஹீரோயின் ஒரு வீட்டிற்குள் செல்கிறாள், அங்கு ஏற்கனவே அவளை போல் தப்பித்த சிலர் அந்த வீட்டிற்குள் இருக்கின்றனர்.மேலும் ஒரு கர்ப்பமாக இருக்கும் பெண்ணும் அந்த வீட்டிற்குள் வருகிறால், இப்படி அவர்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தைகள் தான் இந்த இரு குழந்தைகள்.
அந்த வீட்டில் இருக்கும் அனைவரும் இறந்து விட ஹீரோயின் அந்த இரு குழந்தைகள்
மற்றும் ஒரு நபர் மட்டுமே தப்பித்து வெவ்வேறு இடத்திற்கு சென்று ஒரு குடும்பமாக
வாழ்ந்து வருகின்றனர்.
இறுதியாக ஒரு பாதுகாப்பான இடம்
இருப்பதாக கூறி அங்கு செல்ல முயர்ச்சிகையில் அந்த இன்னொரு நபரும் இறந்து
விடுகிறார். ஹீரோயின் மற்றும் அந்த இரு குழந்தைகளும் அந்த பாதுகாப்பான இடத்திற்கு
செல்கிறார்களா இல்லையா என்பதுதான் இப்படத்தின் மீதி கதை.
மிகவும் கோவம் அடைய செய்யும் தமிழ் சினிமாவின் சிறந்த கதாபாத்திரங்கள்









No comments:
Post a Comment