Saturday, 20 March 2021

இந்த சீன்ல இவங்கதான் ஹீரோ!! (Best One Scene Hero Character)

 தமிழ் திரைப்படங்களில் ஹீரோ,ஹீரோயின்,வில்லன்,காமெடியன் இப்படி பல கதாப்பாத்திரங்கள் நடித்திருப்பார்கள். ஆனால் ஒரு சில கதாப்பாத்திரங்கள் சில நேரம் அல்லது ஒரு சில சீன்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அந்த ஒரு காட்சியில் அவர்களே ஹீரோ போல தெரிவார்கள். அப்படிப்பட்ட ஒருசில கதாப்பாத்திரங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Constable நெப்போலியன். 

இந்த கதாபாத்திரம் கைதி(Kaidhi Tamil Movie) படத்தில் வரும், புதிதாக வேலையில் சேர்வதற்கு  அன்றுதான் Commissioner ஆபீஸ்க்கு நெப்போலியன் வந்திருப்பார், வந்த அன்றே Commissioner ஆபீசில் ஏற்கனவே சில பிரச்சனையால் அங்கிருந்த போலீஸ் அனைவரும் வெளியே சென்றிருப்பார்கள்,

 அந்த சமயத்தில் சில ரௌடிகள் Commissioner ஆபீசில் நுழைந்து அங்கு  லாக்கப்பில் மாட்டிகொள்ளும் பிரதான வில்லனை வெளியே கொண்டுவர சாவியை கேட்டு மிரட்டுவார்கள், ஆரம்பத்தில் பயத்துடன் இருக்கும் நெப்போலியன் பின்பு தன் பொறுப்பை உணர்ந்து அந்த ரவுடியை எதிர்த்து சண்டையிடும் அந்த காட்சியில் Constrible நெப்போலியன் ஒரு ஹீரோ போல தெரிவார்.

மெய்யப்பன்




   இந்த கதாபாத்திரம் பிச்சைக்காரன்(Pichaikaran Tamil Movie) படத்தில் வரும், கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் ராஜா மெய்யப்பன் கதாபாத்திரம், பிச்சைஎடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் நேரலை FM ஒன்றில் வறுமையை ஒழிக்க ஒரு புதிய வழியை சொல்லியிருப்பார். அதாவது 500 1000 ரூபாய் நோட்டை ஒழிப்பதை பற்றி கூறியிருப்பார், இதற்க்குபிறகு தான் நம் நாட்டிலையும்  De Montization  நடந்தது.

 அந்த நேரத்தில் இந்த காட்சி சமுதாய வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக ஒளிப்பரப்ப பட்டது. அந்த சமயங்களில் அந்த காட்சியில் மெய்யப்பன் ஹீரோ போல தெரிவார்.

இந்த பதிவை வீடியோவாக பார்க்க 


குமாரவர்மா


இந்த கதாபாத்திரம் பாகுபலி 2 (Bahubali 2 Movie) வரும் ஒரு பாத்திரம். ஆரம்பத்தில் காமிடியாகவும் ஒரு பயந்த சுபாவமாகவும் காட்டப்படுகின்ற இந்த குமாரவர்மா என்னும் கதாப்பாத்திறத்திற்கு இப்படத்தில் இப்படி ஒரு காட்சி அமைந்திருப்பது ஆட்சிரியத்தை கொடுத்தது.

எதிரி நாட்டை சேர்ந்தவர்கள் அரண்மனைக்குள் நுழைந்து தாக்கிகொண்டிருக்கும் பொழுது கூட குமாரவர்மா பயந்த நிலையில் பெண்களின் பின்னால் ஒழிந்துகொண்டிருப்பார்,அப்பொழுது ஹீரோவான பாகுபலி கத்தி ஒன்றை அவர் கையில் கொடுத்து பெண்களை காப்பாற்றும்படி சொல்லிவிட்டு செல்கிறார்.

இவரால் என்ன செய்யமுடியும் என்று என்னும் பொழுது தன்னையே அறியாமல் ஒரு வீரம் வந்து எதிரி நாட்டவரை கொன்று குவித்துவிடுவார். அந்த காட்சியில் குமாரவர்மா தான் ஹீரோ போல தெரிவார்.

திலகர்


சதுரங்க வேட்டை (Sathuranga Vettai Movie) படத்தில் வில்லனாக நடித்துள்ள திலகர். ஹீரோவை தன்னுடைய வேலைக்கு அழைத்து செல்லும் முக்கிய வில்லன் அவர் தப்பித்துவிட கூடாது என்பதற்காக தன்னுடைய ஆளான திலகரை ஹீரோவின் கர்பமாக இருக்கும் மனைவியோடு விட்டு செல்கிறார்.
  வில்லன் சொல்லும் பொழுது அந்த பெண்ணை கொன்று விடுவதுதான் இவருடைய வேலை.அச்சமயத்தில் பிரசவ வழியில் துடிக்கும் ஹீரோயினை ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்கிறார்,அப்பொழுது வில்லனிடமிருந்து ஹீரோயினை கொன்று விடும்படி தகவல் வருகிறது.

  வில்லனிடமிருந்து தப்பித்து வரும் ஹீரோ வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது ஹீரோயின் நல்ல மனத்தால் மனம் மாறிய திலகர் அவளை கொல்லாமல் விட அந்த சந்தோசத்தில் ஹீரோ மிகுந்த அளவு பணங்களை திலகரிடம் கொடுக்கிறார்.

  அதை சிறிதும் மதிக்காமல் தட்டிவிட்டு அவர் இந்த பணத்திற்காக என்றால் உன் மனைவியையும் குழந்தையும் கொன்றிருப்பேன் என்ற பேசிய அக்காட்சிகளில் வில்லனாக இருந்தாலும் அவரே நிஜமாக ஹீரோ போன்று தெரிவார்.

மாறன்


இந்த கதாபாத்திரம் சேதுபதி(Sethupathy Movie) படத்தில் வரும். இவர் ஹீரோ விஜய்சேதுபதியின்(Actor VijaySethupathy) மகனாக நடித்திருப்பார். ஹீரோ வீட்டில் இல்லாத சமயத்தில் வில்லனுடைய ஆட்கள் அங்கு வந்து மிரட்ட சிறுவனான மாறன் தன் அப்பாவின் அறிவுரையை கேட்டு வீட்டில் இருக்கும் துப்பாக்கியை கையில் எடுத்து வந்து சிறிதளவு பயமும் இல்லாமல் வில்லன்கள் முன்பு தைரியமாக எதிர்த்து நிர்ப்பார். இந்த காட்சிகளில் சிறுவனாக இருந்தாலும் மாறன் ஹீரோ போல தெரிவார்.

பவித்திரா


சீறு(Seeru Tamil Movie) படத்தில் வரும் இந்த கதாபாத்திரம் பள்ளி மாணவியாக நடித்திருப்பார் பவித்திரா.  பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்து அதற்காக பேட்டி  ஒன்றை கொடுப்பார். அதில் பெண்கள் முன்னேற்றம் பற்றியும் சமுதாய பிரச்சனைகள் பற்றியும் பேசியிருப்பார். இந்த காட்சியை பார்த்தாலே புரியும் அது எந்த அளவிற்கு அழுத்தமானது என்று, அக்காட்சியில் பவித்ரா தான் ஹீரோயின் போல தெரிவார்.

Constable பலராம்


மனிதன் படத்தில் Constable கதாப்பாத்திரம் பலராம். வக்கீலாக வரும் ஹீரோவிற்கு எதிர் தரப்பிலிருந்து ஆபத்து வர வாய்ப்பு இருப்பதால் அவருக்கு பாதுகாப்பாக நீதிமன்றம் அனுப்பிவைக்கும் Constable தான் பலராம்.

 பார்ப்பதற்கு நோயாளி போல இருக்கும் இவர் காவலா என்று நினைக்கையில் பல நேரங்களில் ஹீரோ தான் பலராமருக்கு காவலாக இருப்பது போல தோன்றும், ஒரு காட்சியில் ஹீரோவை எதிர் தரப்பினர் தாக்க முயற்சிக்கையில் துப்பாக்கியுடன் நின்று தன்னை மீறி யாரும் உங்களை நெருங்க முடியாது என்று பேசியிருப்பார்.

அந்த காட்சிகளில் பலராமனே ஹீரோ போல தெரிவார்.

இந்த வீடியோவை பார்க்க linkகை Click செய்யவும்








No comments:

Post a Comment

ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட Hollywood படங்கள் (Best One Location Hollywood Movies)

  HOLLYWOOD MOVIES இதை பற்றி பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன, அவர்களுடைய திரைக்கதை, திட்டமிடுதல், தொழில்நுட்பம், புதுமை (Script,Creativit...