Friday, 11 June 2021

கல்லை கூட நடிக்கவைக்கும் சினிமா !! உயிரற்ற பொருளும் கதாபாத்திரம் (Non-Living character as main Role in Cinema)

 


சினிமா என்பது பல கற்பனைகள் நிறைந்த ஒரு கனவு தொழிற்ச்சாலை. சினிமாவில் கல்லையும் நடிக்கவைக்க கூடிய பல திறமையானவர்கள் இருக்கின்றனர். அதாவது உயிரற்ற பொருட்களுக்கு கூட முக்கியமான கதாப்பாத்திரங்களை பொறுத்தியிருப்பார்கள். அப்படி சுவாரசியமான உயிரற்ற கதாப்பாத்திரங்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.

                                                                பொல்லாதவன் பைக்

படத்தின் ஹீரோவான தனுஷ் புதிதாக பல்சர் பைக் ஒன்றை வாங்குகிறார், அந்த பைக் தன் வாழ்வில் வந்த பிறகே தனக்கு வேலை கிடைத்ததாகவும் காதலும் வெற்றி அடைந்ததாகவும் எண்ணி அதை தன் வாழ்வில் ஒரு முக்கிய அம்சமாக உணர்கிறார். திடீரென பைக் காணாமல் போக அதற்க்கு பிறகு நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார். இப்படி படம் முழுவதும் பைக்க்கு ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தை இயக்குநர் பொருத்தியிருப்பார்.

நண்பன் பேனா

தளபதயின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான நண்பன். இந்த படம் என்றாலே முதலில் நியாபகம் வருவது வைரஸ் அவர் கையில் இருக்கும் அந்த பேனா. இந்த பேனா படத்தில் முக்கிய காட்சிகளில் இடம் பெற்றிருக்கும். இதை கைப்பற்ற வட்சன் படம் முழுவதும் முயற்சிப்பார். ஆனால் ஹீரோ பஞ்சவன் பாரிவேந்தன் இதை வாங்கி விடுவார். படத்தின் கிளைமாக்ஸ்லும் இந்த பேனா ஒரு முக்கிய வகித்திருக்கும்.

இந்த பதிவை வீடியோவாக காண்க

24 வாட்ச்

இந்த தலைப்பிற்கு மிகவும் பொருத்தமான கதாப்பாத்திரம் என்றால் இதை சொல்லலாம். என்னென்றால் படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை இந்த வாட்ச் வராத காட்சிகளே இருக்காது. இந்த வாட்சை எடுப்பதற்கு  சூர்யா வில்லனாக மாறி பயங்கரமாக நடித்திருப்பார். முக்கியமாக இந்த வாட்சை time travel device ஆ உபயோகப்படுத்துனதால கதையில் ஒரு முக்கிய கதப்பாத்திரமாக அமைந்திருக்கும். கிரிகெட் மேட்ச் Freeze பண்றது மழையை Freeze பண்றது இப்படி சுவாரஸ்யமான காட்சிகளில் இது போன்ற ஒரு வாட்ச் நம்மிடம் இல்லையே என்று யோசிக்க வைத்திருப்பார் இயக்குனர்.

சுந்தரா டிரவேல்ஸ் Bus


தன்னுடைய அப்பாவாக நினைத்து பஸ்ஸை எப்படியாவது நல்ல நிலைமைக்கு கொண்டுவரவேண்டும் என்று படத்தின் ஹீரோ போராடுகிறார். இந்த பஸ்ஸை வைத்து ஹீரோவான கோபியும் அழகனும் அடிக்கிற லூட்டிகள் நகைசுவையாக அமைத்திருக்கும். பஸ்ஸையே வீடாக மாற்றிஇருப்பார்கள், இந்த பஸ்க்காக தான் இந்த படமே உருவானது போல ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தை கொடுத்திருப்பார்கள்.

மெட்ராஸ் சுவர்


சுவர் இல்லையென்றால் சித்திரம் வரையமுடியாது என்பார்கள், இந்த சுவர் இல்லையென்றால் மெட்ராஸ் படமே உருவாயிருக்காதோ என்று தோன்றும் அளவிற்க்கு சுவருக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள். சுவரை பிடிப்பதுதான் லட்சியம் என்று துடிக்கும் அன்பு, சுவர் தான் கெளரவம் என்று நினைத்து அதை விட்டுக்கொடுக்காத கண்ணன். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகள், இறப்புகள் இதற்கெல்லாம் காரணம் இந்த சுவற்றில் இருக்கும் ஏதோ ஒன்றுதான் என்று உணர வைத்திருப்பார்கள். அந்த உணர்வே இந்த சுவர் இந்த தலைப்பில் இடம்பெற காரணமானது.

பணக்காரன் டாக்ஸி


சூப்பர் ஸ்டார் பல நகைச்சுவை நடிகர்களோடு நடித்துள்ளார், ஆனால் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள லட்சுமி கால் டாக்ஸி ம் நம் தலைவருமான இந்த சேர்க்கை அதை விட சிறப்பாக அமைந்திருக்கும் . அவருடைய கோவம் சந்தோசம் துக்கம் இப்படி அனைத்தும் இந்த டாக்ஸிடம் பகிரும் பொழுது லட்சுமி அவர் குடும்பத்தில் ஒருத்தராக தெரியும்.

VIP தனுஷ் Bike


இளம் வயதினர் அனைவருக்கும் கண்டிப்பாக இது போன்ற நண்பன் கண்டிப்பாக இருக்கும். இந்த படத்தின் ஹீரோ தனுஷ் தன் bike ஐ நம்பாமல் தன் நண்பனிடம் bike ஐ கடனாக கேட்டிருப்பார், கடைசியில் அவர் கைவிட தன் நண்பனான bike இடமே வந்து ஹீரோ நிற்கையில் சிறிதாக சேட்டை செய்யும் bike உயிரற்ற பொருளாக இருந்தாலும் இந்த காட்சியில் உயிருள்ள நண்பனை போல் தெரியும். இது போன்ற நண்பனே நம்மை இக்கட்டான சூழ்நிலையில் காப்பாற்றுவார்கள். இந்த நட்பின் உறவு
vip 2 லையும் தொடரும்.

பண்ணையாரும் பத்மினியும்


இந்த படத்தில் வரும் பத்மினி என்கின்ற கார். பண்ணையாரின் நண்பர் அவரது காரான பத்மினியை சிறிது நாள் வீட்டில் இருக்கும்படி விட்டு செல்கிறார். அந்த சிறிது நாட்களில் கல்யாணம், கருமாதி, காய்கறி சந்தை என்று ஊரே அதை பயன்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் பண்ணையாருக்கு அதன் மேல் ஒரு ஈர்ப்பு வர எப்படியாவது காரை ஓட்டி பார்க்கவேண்டும் என ஆசைபடுகிறார். இப்படி பத்மினி அவரது குடும்பத்தில் ஒருத்தராக மாறிபோகிறது. திடிரென அவர் நண்பரின் மகள் அவரிடம் வந்து தன் அப்பா இறந்து விட்டதாக கூறி அவர் சொத்தை பற்றி பண்ணையாரிடம் கேட்க நேர்மையாக வாழ்ந்து வரும் பண்ணையார் காரை பற்றி மட்டு மறைக்கிறார். இந்த காட்சிகள் தான் பண்ணையாரும் பத்மினிக்கும் உள்ள நெருக்கத்தை உணர்த்துகிறது.

மேலும் இதுபோன்ற பதிவுகளை படிக்க Mersal frames ஐ பின்தொடரவும்

No comments:

Post a Comment

ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட Hollywood படங்கள் (Best One Location Hollywood Movies)

  HOLLYWOOD MOVIES இதை பற்றி பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன, அவர்களுடைய திரைக்கதை, திட்டமிடுதல், தொழில்நுட்பம், புதுமை (Script,Creativit...