Saturday, 12 June 2021

ஹாலிவுட்யின் சிறந்த 5 கப்பல் படங்கள் (Best 5 Ship Movies In Hollywood Explained in tamil)

 இந்த வருசையில் நாம் பார்க்காத படம் Titanic (1997 film), என்னென்றால் இந்த திரைப்படம் பற்றி அறியாதவர்கள் இருக்கமுடியாது. கப்பல் திரைப்படங்களுக்கே இப்படம் ஒரு மையில்கல்லாக அமைந்துள்ளது. எனவே இந்த படத்தை தவிர்த்து மற்ற முக்கியமான படங்களை பற்றி பார்க்கலாம்.

The Finest Hours

1952 இல் நடுகடலில் SS Pendleton என்கின்ற ஒரு எண்ணெய் கப்பல் மோசமான புயலால் பாதிக்கப்பட்டு இரண்டாக உடைந்து கொஞ்சம் கொஞ்சமாக கடலில் மூல்கிக்கொண்டிருக்கிறது.அந்த கப்பலில் உள்ளவர்களை கடல்கரை பாதுகாவலரான Michael J Tougias என்பவர் ஒரு உயிர் காக்கும் விசை படகில் அந்த மோசமான புயலில் சென்று அதில் உள்ளவர்களை காப்பாற்றி அழைத்து வருகிறார்.

இந்த நிகழ்வு அவர் நிஜ வாழ்வில் நடந்த ஒரு சம்பவம். இதை ஒரு புத்தகமாக அவர் வெளியிட்டார். இதை பார்த்து வியந்த Disney நிறுவனம் இக்கதையை தயாரித்து 2016 ல் திரைப்படமாக வெளியிட்டது. இப்படத்தில் வரும் புயல் காட்சிகளும் அலைகளும் மிகவும் தத்ரூபமாக எடுக்கபட்டிருக்கும். பார்பவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் இந்த படம்.

இந்த பதிவை வீடியோவாக காண்க

Battle Ship

2012 ல் வெளியான இந்த திரைப்படம் ஒரு மிலிட்டரி ஆக்க்ஷன் படம். பசுபிக் பெருங்கடலில் ஹவாய் என்கின்ற இடத்தில் சில ஏலியன்ஸ் கப்பல்கள் அங்கு உள்ள செயற்கைக்கோள் தொடர்புகளை துண்டிகிறது.

அமெரிக்க கப்பல் படை அந்த ஏலியன்ஸ் கப்பல்களை அழிக்க Myoko மற்றும் சில போர் கப்பல்களை கொண்டு முயற்சி செய்கிறார்கள். மிகவும் சக்தி வாய்ந்த ஏலியன்ஸ் கப்பல், JDS Myōkō என்ற கப்பலை அழித்துவிடுகிறது.

மற்ற போர் கப்பலில் உள்ள வீரர்கள் மிகவும் திறமையாக ஏலியன்ஸ் கண்டுபிடித்திட கூடாது என்பதற்காக Radar பயன்படுத்தாமல் சுனாமி வருவதை கண்டுப்பிடடிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இரண்டு ஏலியன்ஸ் கப்பல்களை அழித்துவிடுகிறார்கள். மற்ற ஏலியன்ஸ் கப்பல்களை இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்திய பழைய கப்பலான  battleship USS Missouri   என்கின்ற Battle Ship மூலம் அழிக்க முயற்ச்சிக்கின்றனர், இந்த முயற்ச்சியில் பழைய கப்பலான Battle Ship ஏலியன்ஸ் கப்பலை அழிகிறதா இல்லையா என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை.

Captain Philips


2013 ல் வெளியான இந்த திரைப்படம்  Captain Richard Phillips என்பவரின் நிஜ வாழ்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவம்.

இந்த அனுபவத்தை  A Captain's Duty: Somali Pirates, Navy SEALs, and Dangerous Days at Sea  என்கின்ற புத்தகத்தை எழுதினார், இதன் மூலமே இப்படம் உருவானது.

ஒரு நாள்  MV Maersk Alabama என்கின்ற சரக்கு கப்பலின் மாலுமியாக செல்கிறார் பிலிப். இந்த சரக்கு கப்பல் ஓமன் நாட்டிலிருந்து கென்யாவிற்கு சோமாலியாவில் உள்ள  Guardafui Channel என்கின்ற கணவாய் வழியாக செல்கிறது.

அப்பொழுது சோமாலியாவில் உள்ள சில கடல் கொள்ளையர்கள் கப்பலில் உள்ள பொருட்களை திருடும் முயற்ச்சியில் கப்பலை தாக்குகின்றனர். அதை தடுக்க பிலிப் முயற்ச்சிக்கிறார்.

 எப்படியோ கப்பலில் நுழைந்த கொள்ளையர்கள் கப்பலில் உள்ள பொருட்களை திருட முயற்ச்சிக்கின்றனர். அப்பொழுது கப்பலில் மறைந்து இருந்த சில வேலையாட்கள் கொள்ளையரின் தலைவனை பிடித்து வைத்துகொண்டு மற்றவர்களை கப்பலில் இருந்து வெளியேறுமாறு சொல்கின்றனர்.

அதன் பிறகு கொள்ளையரின் தலைவன் ஒரு உயிர் காக்கும் விசை படகின் மூலம் தப்பிசெல்கையில் பிலிப்ஸ் யும் பனை கைதியாக கடத்தி செல்கின்றனர், அவர்களிடமிருந்து பிலிப்ஸ் எப்படி காப்பாற்றபடுகிறார் என்பதுதான் இப்படத்தின் மீதி கதை.

Poseidon

2006 ல் வெளியான இந்த திரைப்படம்   Paul Gallico's  அவர்களின் 1969 ல் வந்த the Poseidon adventure எனும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட ஒரு படம். நடுகடலில் சென்று கொண்டிருக்கும் Poseidon என்கின்ற ஒரு சொகுசு கப்பல் பெரிய சுனாமி அலையால் தாக்கப்பட்டு தலைகீழாக கவிழ்கிறது. திடிரென கவிழ்ந்த கப்பலை சுற்றி ஒரு பெரிய நீர்க்குமிழி உருவாகின்றது, அதனால் கப்பலினுள் தண்ணீர் செல்ல ஒருசில மணி நேரம் ஆகின்றது.

தண்ணீருக்கு அடியில் தலைகீழாக இருக்கும் கப்பலின் மேல் பகுதியில் அனனவரும் சிக்கிக்கொள்கின்றனர்.

கதையின் ஹீரோ மற்றும் அவர் மகள் இன்னும் சிலபேர் கப்பலின் அடித்தளத்திற்கு மேல்நோக்கி செல்கின்றனர். கப்பல் முழுவதும் தண்ணீர் நிறைந்து மூழ்குவதற்குள் எப்படி தப்பிகின்றனர் என்பதுதான் இப்படத்தின் மீதி கதை.

Ghost ship

இந்த படம் 2002 வெளியான ஒரு horror படம். ஒரு மாலை நேரத்தில் MS Antonia Graza  என்கின்ற சொகுசு கப்பலில் அனைவரும் மிகவும் சந்தோசமாக பாட்டு பாடி நடனமாடிக்கொண்டு இருகின்றனர்,அப்பொழுது  திடீரென ஒரு இறுக்கமான இரும்பு கம்பி நடனமாடி கொண்டிருப்பவர்களின் இடையே மிகவும் அதிவேகமாக செல்கிறது.அதில் அங்கு இருந்தவர்களின் உடல்கள் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு அனைவரும் இறந்துவிடுகின்றனர். இதில்  Katie என்ற சிறுமி மட்டும் உயர் தப்பிக்கிறாள்.

40 ஆண்டுகளுக்கு பிறகு உடைந்த கப்பல் படகு இதை சரி செய்யும் ஆறு பேர் கொண்ட ஒரு குழு வானிலை ஆராய்ச்சி செய்யும் ஒருவரின் மூலமாக தெரிந்துக்கொண்டு அந்த கப்பலை சரி செய்து அதன் மூலம் பணம் சம்பாரிக்கும் நோக்கத்தோடு அந்த கப்பலை தேடி செல்கின்றனர்.

40 ஆண்டுகளாக தண்ணீரில் மிதப்பதால் துருப்பிடித்து மிகவும் மோசமான நிலையில் கப்பல் இருக்கிறது. அந்த கப்பலில் எதோ அமானுஷ்ய விஷயங்கள் நடக்கிறது.  40 வருடத்திற்கு முன்பு இறந்து போன அந்த சிறுமியும் மற்றவர்களும் அவர்களின் கண்களுக்கு தெரிகின்றனர்.

இதற்கிடையில் ஒரு பெட்டியில் தங்க கட்டிகள் கிடைக்கின்றது, பயத்துடன் இருந்த அவர்கள் கப்பலை விட்டுவிட்டு தங்க கட்டிகளை மட்டும் எடுத்து செல்ல நினைத்து கப்பளை விட்டு வெளியேறுகையில் அவர்கள் வந்த கப்பல் மர்மமான முறையில் வெடித்து சிதறுகிறது. கப்பலில் இருந்தவர்கள் எப்படி இறந்தார்கள், இவர்கள் எப்படி கப்பலிலிருந்து தப்பித்து செல்கின்றனர் என்பதுதான் இந்த படத்தின் கதை.

தமிழ் சினிமாவில் மிகவும் எரிச்சல், கோபம் அடையச்செய்த 9 கதாபாத்திரங்கள்!!! |

Most irritating Character in Tamil Cinema!!!

No comments:

Post a Comment

ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட Hollywood படங்கள் (Best One Location Hollywood Movies)

  HOLLYWOOD MOVIES இதை பற்றி பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன, அவர்களுடைய திரைக்கதை, திட்டமிடுதல், தொழில்நுட்பம், புதுமை (Script,Creativit...