Saturday, 20 March 2021

இந்த சீன்ல இவங்கதான் ஹீரோ!! (Best One Scene Hero Character)

 தமிழ் திரைப்படங்களில் ஹீரோ,ஹீரோயின்,வில்லன்,காமெடியன் இப்படி பல கதாப்பாத்திரங்கள் நடித்திருப்பார்கள். ஆனால் ஒரு சில கதாப்பாத்திரங்கள் சில நேரம் அல்லது ஒரு சில சீன்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அந்த ஒரு காட்சியில் அவர்களே ஹீரோ போல தெரிவார்கள். அப்படிப்பட்ட ஒருசில கதாப்பாத்திரங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Constable நெப்போலியன். 

இந்த கதாபாத்திரம் கைதி(Kaidhi Tamil Movie) படத்தில் வரும், புதிதாக வேலையில் சேர்வதற்கு  அன்றுதான் Commissioner ஆபீஸ்க்கு நெப்போலியன் வந்திருப்பார், வந்த அன்றே Commissioner ஆபீசில் ஏற்கனவே சில பிரச்சனையால் அங்கிருந்த போலீஸ் அனைவரும் வெளியே சென்றிருப்பார்கள்,

 அந்த சமயத்தில் சில ரௌடிகள் Commissioner ஆபீசில் நுழைந்து அங்கு  லாக்கப்பில் மாட்டிகொள்ளும் பிரதான வில்லனை வெளியே கொண்டுவர சாவியை கேட்டு மிரட்டுவார்கள், ஆரம்பத்தில் பயத்துடன் இருக்கும் நெப்போலியன் பின்பு தன் பொறுப்பை உணர்ந்து அந்த ரவுடியை எதிர்த்து சண்டையிடும் அந்த காட்சியில் Constrible நெப்போலியன் ஒரு ஹீரோ போல தெரிவார்.

மெய்யப்பன்




   இந்த கதாபாத்திரம் பிச்சைக்காரன்(Pichaikaran Tamil Movie) படத்தில் வரும், கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் ராஜா மெய்யப்பன் கதாபாத்திரம், பிச்சைஎடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் நேரலை FM ஒன்றில் வறுமையை ஒழிக்க ஒரு புதிய வழியை சொல்லியிருப்பார். அதாவது 500 1000 ரூபாய் நோட்டை ஒழிப்பதை பற்றி கூறியிருப்பார், இதற்க்குபிறகு தான் நம் நாட்டிலையும்  De Montization  நடந்தது.

 அந்த நேரத்தில் இந்த காட்சி சமுதாய வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக ஒளிப்பரப்ப பட்டது. அந்த சமயங்களில் அந்த காட்சியில் மெய்யப்பன் ஹீரோ போல தெரிவார்.

இந்த பதிவை வீடியோவாக பார்க்க 


குமாரவர்மா


இந்த கதாபாத்திரம் பாகுபலி 2 (Bahubali 2 Movie) வரும் ஒரு பாத்திரம். ஆரம்பத்தில் காமிடியாகவும் ஒரு பயந்த சுபாவமாகவும் காட்டப்படுகின்ற இந்த குமாரவர்மா என்னும் கதாப்பாத்திறத்திற்கு இப்படத்தில் இப்படி ஒரு காட்சி அமைந்திருப்பது ஆட்சிரியத்தை கொடுத்தது.

எதிரி நாட்டை சேர்ந்தவர்கள் அரண்மனைக்குள் நுழைந்து தாக்கிகொண்டிருக்கும் பொழுது கூட குமாரவர்மா பயந்த நிலையில் பெண்களின் பின்னால் ஒழிந்துகொண்டிருப்பார்,அப்பொழுது ஹீரோவான பாகுபலி கத்தி ஒன்றை அவர் கையில் கொடுத்து பெண்களை காப்பாற்றும்படி சொல்லிவிட்டு செல்கிறார்.

இவரால் என்ன செய்யமுடியும் என்று என்னும் பொழுது தன்னையே அறியாமல் ஒரு வீரம் வந்து எதிரி நாட்டவரை கொன்று குவித்துவிடுவார். அந்த காட்சியில் குமாரவர்மா தான் ஹீரோ போல தெரிவார்.

திலகர்


சதுரங்க வேட்டை (Sathuranga Vettai Movie) படத்தில் வில்லனாக நடித்துள்ள திலகர். ஹீரோவை தன்னுடைய வேலைக்கு அழைத்து செல்லும் முக்கிய வில்லன் அவர் தப்பித்துவிட கூடாது என்பதற்காக தன்னுடைய ஆளான திலகரை ஹீரோவின் கர்பமாக இருக்கும் மனைவியோடு விட்டு செல்கிறார்.
  வில்லன் சொல்லும் பொழுது அந்த பெண்ணை கொன்று விடுவதுதான் இவருடைய வேலை.அச்சமயத்தில் பிரசவ வழியில் துடிக்கும் ஹீரோயினை ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்கிறார்,அப்பொழுது வில்லனிடமிருந்து ஹீரோயினை கொன்று விடும்படி தகவல் வருகிறது.

  வில்லனிடமிருந்து தப்பித்து வரும் ஹீரோ வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது ஹீரோயின் நல்ல மனத்தால் மனம் மாறிய திலகர் அவளை கொல்லாமல் விட அந்த சந்தோசத்தில் ஹீரோ மிகுந்த அளவு பணங்களை திலகரிடம் கொடுக்கிறார்.

  அதை சிறிதும் மதிக்காமல் தட்டிவிட்டு அவர் இந்த பணத்திற்காக என்றால் உன் மனைவியையும் குழந்தையும் கொன்றிருப்பேன் என்ற பேசிய அக்காட்சிகளில் வில்லனாக இருந்தாலும் அவரே நிஜமாக ஹீரோ போன்று தெரிவார்.

மாறன்


இந்த கதாபாத்திரம் சேதுபதி(Sethupathy Movie) படத்தில் வரும். இவர் ஹீரோ விஜய்சேதுபதியின்(Actor VijaySethupathy) மகனாக நடித்திருப்பார். ஹீரோ வீட்டில் இல்லாத சமயத்தில் வில்லனுடைய ஆட்கள் அங்கு வந்து மிரட்ட சிறுவனான மாறன் தன் அப்பாவின் அறிவுரையை கேட்டு வீட்டில் இருக்கும் துப்பாக்கியை கையில் எடுத்து வந்து சிறிதளவு பயமும் இல்லாமல் வில்லன்கள் முன்பு தைரியமாக எதிர்த்து நிர்ப்பார். இந்த காட்சிகளில் சிறுவனாக இருந்தாலும் மாறன் ஹீரோ போல தெரிவார்.

பவித்திரா


சீறு(Seeru Tamil Movie) படத்தில் வரும் இந்த கதாபாத்திரம் பள்ளி மாணவியாக நடித்திருப்பார் பவித்திரா.  பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்து அதற்காக பேட்டி  ஒன்றை கொடுப்பார். அதில் பெண்கள் முன்னேற்றம் பற்றியும் சமுதாய பிரச்சனைகள் பற்றியும் பேசியிருப்பார். இந்த காட்சியை பார்த்தாலே புரியும் அது எந்த அளவிற்கு அழுத்தமானது என்று, அக்காட்சியில் பவித்ரா தான் ஹீரோயின் போல தெரிவார்.

Constable பலராம்


மனிதன் படத்தில் Constable கதாப்பாத்திரம் பலராம். வக்கீலாக வரும் ஹீரோவிற்கு எதிர் தரப்பிலிருந்து ஆபத்து வர வாய்ப்பு இருப்பதால் அவருக்கு பாதுகாப்பாக நீதிமன்றம் அனுப்பிவைக்கும் Constable தான் பலராம்.

 பார்ப்பதற்கு நோயாளி போல இருக்கும் இவர் காவலா என்று நினைக்கையில் பல நேரங்களில் ஹீரோ தான் பலராமருக்கு காவலாக இருப்பது போல தோன்றும், ஒரு காட்சியில் ஹீரோவை எதிர் தரப்பினர் தாக்க முயற்சிக்கையில் துப்பாக்கியுடன் நின்று தன்னை மீறி யாரும் உங்களை நெருங்க முடியாது என்று பேசியிருப்பார்.

அந்த காட்சிகளில் பலராமனே ஹீரோ போல தெரிவார்.

இந்த வீடியோவை பார்க்க linkகை Click செய்யவும்








Wednesday, 10 March 2021

பேராபத்தில் மாட்டிக்கொண்ட குடும்ப படங்கள் (Best Family Survival Hollywood Movies)

The Impossible


இந்த படம் 2012 வெளியானது. MARIYA BELANA அவர்களுடைய வாழ்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஹீரோ தன்னுடைய மனைவி இரண்டு குழந்தைகளோடு தாய்லாந்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்குகிறார்கள்.

அடுத்த இரண்டு நாட்களில் அந்த சொகுசு விடுதியில் சுனாமி பேரலை தாக்குகிறது. அப்பொழுது  ஹீரோயின் மரியா மற்றும் அவர்களின் முதல் மகனும் பேரலையில் சிக்கி ஒருசில காயங்களுடன் தப்பித்து ஒரு மரத்தின் மேல் ஏறி அங்கிருந்து ஒருசிலரின் உதவியுடன் மருத்துவமனைக்கு செல்கின்றனர். ஹீரோவும் அவர்களின் மற்ற இரு குழந்தைகளும் வேறு வேறு இடங்களுக்கு சென்று மாட்டிக்கொள்கிறார்கள்.

இறுதியாக இவர்களுக்கு என்ன நடக்கிறது இந்த குடும்பம் ஒன்றாக சேர்கிறதா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை.

Sinister


 இந்த படம் 2012 ல் வெளியான ஒரு பேய் படம். உண்மை சம்பவங்களை கதையாக எழுதக்கூடிய ஹீரோ தன்னுடைய கதை பற்றிய தேடலுக்காக ஒரு வீட்டில் இருந்து  இன்னொரு வீட்டுக்கு சென்று தங்குகிறார்.

அந்த வீட்டில் ஏற்கனவே வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தை யாரோ மரத்தில் தூக்கு போடவைத்து கொன்றிருப்பார்கள். அதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள அதே வீட்டில் ஹீரோ தன் குடும்பத்தோடு தங்கியுருப்பார்.

அந்த வீட்டின் மெத்தையில் ஒரு மூவி PROJECTER ம் நான்கு ரீல்ஸ் ம கிடைகிறது. அதை போட்டு பார்க்கும் பொழுது ஏற்கனவே அந்த வீட்டில் தங்கியிருந்த பல குடும்பங்களை யாரோ கொன்று அதை வீடியோவாக எடுத்து வைத்திருப்பார்கள்.


இறுதியில் இவருடைய குடும்பமும் அதே பிரச்னையில் சிக்கி கொள்கிறார்கள். இதை அனைத்தையும் செய்யும்  நபர் யார்? இந்த கும்பத்திற்கு என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை.

No Escape

இது 2015 ல் வெளியான Action மற்றும் Thriller படம். அமெரிக்கரான ஹீரோ ஒரு கம்பெனியில் சேர்வதற்கு  கிழக்கு ஆசியா  நாட்டிற்கு தன் குடும்பத்துடன் செல்கிறார். அன்றைக்கு இரவே அந்நாட்டின் பிரதமர் சில அரசியல் காரணங்களுக்காக  கலவரகாரர்களால் கொல்லபடுகிறார்.

 மறுநாள் காலையில் கடைவீதிக்கு செல்லும் பொழுது போலீஸ் க்கும் கலவரக்காரர்களுக்கும் இடையே நடக்கும் பிரச்சனையில் ஹீரோ மாட்டிகொல்கிறார். அங்கிருந்து தப்பித்து விடுதிக்கு வந்து பார்க்கும்பொழுது அங்கு சிலர் ஹோட்டலுக்குள் இருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்களை வெளியே இழுத்து சென்று கொடூரமாக சுட்டு கொள்கின்றனர்.

 இந்த கலவரத்திலிருந்து தன்னுடைய குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார், அந்நாட்டின் எல்லையை கடந்து ஒரு பாதுகாப்பான இடத்திற்கு எப்படி தன் குடும்பத்தை கொண்டு சேர்க்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.

இதை பதிவை விடியோவாக YouTubeயில்  பார்க்க...

A Quiet Place

இப்படம் 2018 ல் வெளியான Science Fiction மற்றும் பேய் படம். படத்தின் ஆரம்பத்தில் ஹீரோ தன் குடும்பத்துடன் ஒரு சூப்பர் மார்கெட்டிற்குள் தங்களுக்கு தேவையான பொருட்களை துளியளவு சத்தமும்மின்றி மெதுவாக பயத்துடன் எடுத்து கொண்டிருக்கிறார்.

பின்பு  எந்தவித சத்தமும் இல்லாமல் ஒருவர் பின் ஒருவராக வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென ஒரு சத்தம் எழுகிறது, அது என்னவேன்றால் அவர்களின் கடைசி மகனான சிறுவன் ஒரு பொம்மையை சத்தமிட செய்கிறான், அதை கேட்ட அதிர்ச்சியில் அவன் தந்தை வேகமாக ஓடிசென்று அக்குழந்தையைக் காப்பாற்ற முயற்சிக்கையில் ஒரு கொடிய மிருகம் திடீரென வந்து அக்குழந்தையை தூக்கி செல்கிறது.

ஒரு சிறய சத்தம் போட்டாலும் ஒரு மிருகம் நம்மை தாக்கும் என்பதுதான் இப்படத்தின் கதை. இதில் கொடுமை என்னவென்றால் கதையில் ஹீரோயின் கர்பமாக இருப்பாள், எப்படி தன் பிரசவ நேரத்தை சமாளிக்கிறாள், தன் குழந்தைகளை எப்படி இந்த மிருகத்திடமிருந்து காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை.

Bird Box

இது 2018 ல் வெளியான படம். படத்தின் ஆரம்பத்தில் ஹீரோயின் தன்னுடைய  இரு குழந்தைகளிடம் ஒரு இடத்திற்கு ஆற்று வழிபாதையில் செல்வதாக கூறி ஒருசில அறிவுரைகளை சொல்கிறாள். அது என்னவென்றால் அந்த இடத்தை சென்று அடையும் வரை நம் மூவரின் கண்களும் கட்டபட்டிருக்கும் எக்காரனத்தைகொண்டும் கட்டை திறக்க கூடாது, அப்படி திறந்தாள் இறந்திவிடுவோம் என்று கூறுகிறாள்.

  இதை தொடர்ந்து மூவரும் ஒரு படகில் ஏறி ஆறு வழியாக செல்கின்றனர். இதற்கிடையில் ஐந்து வருடத்திற்கு முன்பு என்று ஒரு கதை தொடர்கிறது, அதில் ஹீரோயின் கர்பமாக இருக்கிறாள், தன் அக்காவுடன் மருத்துவமனைக்கு சென்று திரும்பி வரும்வழியில் அந்த ஊரில் ஒரு அமானுசிய நோய் ஒன்று பரவி வருகிறது. அது என்னவென்றால் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர் மற்றவரை பார்க்கும்  தன்னை தானே தற்கொலை செய்துகொள்வார். அதில் அவள் அக்கா இறந்து விடுகிறாள்.

அதிலிருந்து தப்பித்து ஹீரோயின் ஒரு வீட்டிற்குள் செல்கிறாள், அங்கு ஏற்கனவே அவளை போல் தப்பித்த சிலர் அந்த வீட்டிற்குள் இருக்கின்றனர்.மேலும் ஒரு கர்ப்பமாக இருக்கும் பெண்ணும் அந்த வீட்டிற்குள் வருகிறால், இப்படி அவர்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தைகள் தான் இந்த இரு குழந்தைகள்.

   அந்த வீட்டில் இருக்கும் அனைவரும் இறந்து விட ஹீரோயின் அந்த இரு குழந்தைகள் மற்றும் ஒரு நபர் மட்டுமே தப்பித்து வெவ்வேறு இடத்திற்கு சென்று ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.

இறுதியாக ஒரு பாதுகாப்பான இடம் இருப்பதாக கூறி அங்கு செல்ல முயர்ச்சிகையில் அந்த இன்னொரு நபரும் இறந்து விடுகிறார். ஹீரோயின் மற்றும் அந்த இரு குழந்தைகளும் அந்த பாதுகாப்பான இடத்திற்கு செல்கிறார்களா இல்லையா என்பதுதான் இப்படத்தின் மீதி கதை.


மிகவும் கோவம் அடைய செய்யும் தமிழ் சினிமாவின் சிறந்த கதாபாத்திரங்கள் 

Link 



Friday, 5 March 2021

ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட Hollywood படங்கள் (Best One Location Hollywood Movies)

 
HOLLYWOOD MOVIES இதை பற்றி பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன, அவர்களுடைய திரைக்கதை, திட்டமிடுதல், தொழில்நுட்பம், புதுமை (Script,Creativity,Technology,Planning ect.,)  இதை போல நிறைய விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.  இதை பற்றி அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

இன்று நாம் பார்க்கபோவது ஒரே LOCATION ல் எடுக்கப்பட்ட படங்கள். அதாவது படத்தின் முக்கிய கதை ஒரே LOCATION ல் எடுக்கப்பட்டதாக இருக்கும். ஹாலிவுட் ல் இது போன்ற படங்கள் பல இருக்கிறது. அதில் ஐந்து முக்கிய படங்களை பற்றி இன்று பார்க்கலாம்.


PANIC ROOM



இந்த படம் 2002 ல் வெளியானது. PANICROOM அதாவது ஒரு SAFTYROOM(பாதுகாப்பு அறை). வெளிநாடுகளில் ஒழிந்து கொள்வதற்கு முக்கியமாக திருட வருபவர்கள், தீவிரவாதிகள், கொள்ளையடிக்க வருபவர்கள் இவர்களிடமிருந்து தங்களை  பாதுகாத்து கொள்ளவும் அதிக விலை உள்ள பொருட்களை  மறைத்து வைக்கவும் இந்த ரகசிய அறைய பயன்படுத்தபடுகிறது..

இதை மைய்யபடுத்தி தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.. இதே போல தன்னுடைய வீட்டில் திருட வரும் மூன்று திருடர்களிடமிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள ஒரு அம்மாவும் மகளும் இந்த (PANICROOM) பாதுகாப்பு அறைக்குள் ஒழிந்துகொள்கிறார்கள், ஆனால் திருடவந்தவர்களுக்கு தேவையான அந்த பொருள் அந்த அறைக்குள் தான் உள்ளது. 




எப்படி  அவர்கள் அந்த அறைக்கு சென்று அந்த பொருளை எடுகிறார்கள், அந்த அம்மாவும் மகளும் தங்களை காப்பாற்றிக்கொள்ள என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை.

 இந்த படத்துடைய கதை அனைத்துமே இந்த வீடு இந்த அறை இதற்குள்ளேயே  தான் எடுத்திருப்பார்கள் , பல பேர் இந்த படத்தை பார்த்து ரசித்திருப்பீர்கள். பார்க்காதவர்கள் கண்டிப்பா பார்க்கவும்.


ESCAPE ROOM




    இந்த படம் 2019 ல வெளியான ஒரு  Psychological horror மற்றும் Thriller படம். இந்த படம் ஒரு Puzzle GAME மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டை விளையாட சம்பந்தம் இல்லாத ஆறு பேருக்கு Invitation போகிறது. இந்த ஆறு பேரும் ஒரு அறையுனுள்  வந்து காத்துகொண்டு இருப்பார்கள்.இந்த விளையாட்டை பத்தி பேசிகொண்டு இருபார்கள். அப்படி   அவர்கள் பேசிகொண்டு இருக்கும் போதுதான் தெரியவருகிறது அந்த விளையாட்டு ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது என்று. அந்த அறை திடீருன்னு சூடாக ஆரம்பிக்கிறது , அதுலிருந்து வெளியுள் செல்ல ஒருசில CLU மாதிரியான விசயங்கள் அங்கு இருக்கும் அதை  கண்டுபிடித்து எப்படி வெளியே  செல்கிறார்கள்.




தொடர்ந்து அடுத்தடுத்து வரும் அறைகளிலும் அவர்களுக்கு பிரச்னை வருகிறது, அதற்க்கான CLU ம் கிடைக்கிறது. அதை  கண்டுபிடித்து எப்புடி வெளியே செல்கிறார்கள், யார் இந்த பரிசை அடையுறாங்க என்பதுதான் இந்த படத்தின் கதை.


இந்த  விடியோவை காண link ஐ click செய்யவும் 

EXAM



 இந்த படம் 2009ல் வெளியான படம். இது ஒரு Psychological Thriller படம். ஒரு கம்பெனி வேலைக்காக ஒரு EXAM வைக்கப்படுது, அதை எழுத எட்டு பேர் ஒரு அறைக்குள் போகிறார்கள். அங்கு தனித்தனி டேபிளில் ஒன்றில் இருந்து எட்டு வரை நம்பர் அச்சிடப்பட்ட விடைத்தாள் வைக்கப்பட்டுள்ளது. Exam கண்காணிப்பவர் ஒரு செக்யூரிட்டியோடு உள்ளே  வந்து Exam விதிமுறை பற்றி கூறுகிறார்.

 இந்த EXAM ல் ஒரு கேள்விக்கு மட்டுமே பதில் அளிக்க வேண்டும் அதற்க்கான நேரம் என்பது மணி நேரம். மூன்று விதிமுறைகளும் கொடுக்கபடுகிறது, அதில் ஏதேனும் ஒன்றை மீறினாலும் இந்த EXAM ல் இருந்து அவர் விலக்கிக்கொள்ளபடுவார் என்று சொல்லிவிட்டு அவர் வெளியே செல்கிறார்.




அங்கிருந்து பரிட்சைக்காண நேரம் தொடங்குகிறது. அனைவரும் விடைத்தாளை பிரித்து பார்கின்றனர், அதில் எந்த கேள்வியும் இல்லாமல் காலியாக உள்ளது. அவர்கள் எப்படி கேள்விய கண்டுபிடித்து பதில் அளிக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படம் முழுவதும் இந்த பரீட்சை அறைக்குள் மட்டுமே எடுக்கபட்டிருக்கும்.


127 HOURS



  இந்த படம் 2010 ல் வெளியான ஒரு ADVENTURE சம்பந்தப்பட்ட படம், ஒரு உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட படம். கதைப்படி ஹீரோ ஒரு MOUNTINE CLAIMER.  அதாவது மலை ஏறுதல், காட்டு பகுதியில் பயணம் செய்தல்  இது போன்ற செயலில் ஈடுபடுபவர். அப்படி ஒரு நாள் ஹீரோ செல்லும் பொழுது பள்ளத்தாக்குகளில் இறங்கும் பொழுது தடுக்கி கீழே விழுகிறார், அப்படி விழும்போது  பெரிய பாறை ஒன்று அவர் கையின் மீது விழுந்து அங்கேயே சிக்கி கொள்கிறார்.




 அந்த வறண்ட மலை பகுதியில் யாரும் உதவிக்கு வராத நிலையில் அங்கேயே
127 மணி நேரம் மாட்டிகொண்டு தப்பிக்க முயர்ச்சிகிறார், இதுதான் இந்த படத்தின் கதை. இந்த படம் முழுவதும் அவர் மாட்டிகொண்ட அந்த இடத்துலேயே தான் எடுக்கப்பட்டு இருக்கும்.


BURIED



 இந்த படம் 2010 வெளியான PSYCHOLOGICAL THRILLER படம். படம் தொடங்கும் பொழுதே ஹீரோ ஒரு மரபெட்டியில் அடைக்கப்பட்டு இருப்பார். அவரிடம் TORCH, செல்போன் போன்று சில பொருட்கள் இருக்கும். அவரை வெளியே விடவேண்டும் என்றால் 5 மில்லியன் டால்லர்ஸ் வேண்டும் என்று ஒரு சிலர் கோரிக்கை வைக்கின்றனர். அமெரிக்கரான ஹீரோ ஈராக் ல் வந்து TRUCK டிரைவராக வேலை செய்துவருவார், அதனால் அமெரிக்க கம்பெனி இவருக்கு உதவ முன் வராத நிலையில் இறுதியாக ஹீரோ அங்கிருந்து தப்பித்து செல்கிறாரா? இல்லையா? என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படம் முழுவதும் இந்த சவபெட்டியில் தான் எடுக்கப்பட்டிருக்கும். இது ஒரு நல்ல திரைகதை கண்டிப்பாக பார்க்கவும்.


இந்த  விடியோவை காண link ஐ click செய்யவும்

Wednesday, 3 March 2021

தமிழ் சினிமாவின் தயாரிப்பு நிறுவனங்கள் (Tamil Film Production House)

 

இந்த டிஜிட்டல் காலத்தில் என்னதான் படங்களை சாட்டிலைட் சேனல் OTT  பிளாட்பார்ம் ஹோம் தியேட்டரில் பார்பதை விட தியேட்டரில்  அதுவும் அந்த 300 400 பேறுடன் சேர்ந்து பார்க்கிற உணர்வே தனிதான்.

இன்றைக்கு இந்த பதிவில் நாம் பார்க்க போகும் இந்த விஷயம்  தான் நாம் தியேட்டருக்கு உள்ளே  இருக்கின்ற நம்மை படத்திற்குள்  கொண்டு செல்கிற ஒரு முக்கியமான விஷயம்.

வாழ்க்கையில் நாம் நிறைய வரிசையிலும், கூட்டத்திலும் எரிச்சலுடன் நின்றிருப்போம் ஆனால் இந்த சினிமா டிக்கெட் வாங்க நிற்கும்போது மட்டும் தான் ஒரு தனி சந்தோஷம்.

அடித்து பிடித்து  டிக்கெட் வாங்கி தியேட்டருக்குள் சென்றால் காற்றுவாக்கில் பாப்கான் வாசமும் பப்ஸ் வாசனையும் அடிக்கும்.

அப்பொழுதே நாம் முடிவு செய்துவிடுவோம் இடைவேளையில் இதை  வாங்கவேண்டும் என்று, அதிலும் சிலபேர் இடைவேளையில் கிடைக்காது என்று முன்பே ஒரு பார்சல் செய்துவிட்டு தியேட்டர் கதவு அருகில் சென்றால் டிக்கெட் கிழிப்பவர் என்னவோ அவர்தான் தியேட்டருக்கு ஓனர் போல கிழித்து கொடுப்பார், அதை வாங்கிட்டு அப்படியே தியேட்டற்குள் சென்று அமர்ந்து விட அப்பொழுது தான் நமக்கு பிடிக்காத ஒரு சில விளம்பரங்களை போட்டு விளக்கை  அனைப்பார்கள். 

  புகைபிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும், மற்றும் உயிரகொள்ளும் என்ற ஆடியோவரும் அது முடிந்ததும்  மிகவும் பிரம்மாண்டமாக ஒரு சத்தம் வரும், அதுதான் ப்ரோடக்சன் ஹவுஸ் சவுண்ட். 



அந்த புரோடக்சன் ஹவுஸ் பற்றி  தான் இந்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். 




ஜெமினி ஸ்டூடியோஸ்(Gemini Studios) 


இதை சிறு வயதிலிருந்தே நிறைய படத்தில் நாம் பார்த்திருப்போம். இதனுடைய நிறுவனர் (FOUNDER) எஸ் எஸ் வாசன். இவர்களுடைய முதல் படம் மதனகாமராஜன் 1941  வெளியானது. 

சென்னை ஜெமினி ஸ்டூடியோஸ் அருகில் கட்டியதால் தான் அண்ணா FLYOVER யை ஜெமினி FLYOVER(Gemini Bridge) என்று அழைக்கிறார்கள். 

அன்று ஜெமினி ஸ்டூடியூவாக இருந்து இப்பொழுது ஜெமினி பிலிம் சர்க்யூட்(Gemini Film circuit) என்று மாறியது. இவர்கள் கடைசியாக எடுத்த படம் கடல். இது மணிரத்தினம் அவர்களுடன் சேர்த்து இவர்கள் தயாரித்த படம்.

ஏவிஎம்(AVM)



ஏ வி மெய்யப்பச் செட்டியார் இவரை தமிழ் சினிமாவில் தெரியாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம். இவரால் உருவாக்கப்பட்டதுதான் ஏவிஎம் ஸ்டுடியோ. ஏவிஎம் ஸ்டுடியோ தமிழ், தெலுங்கு, மலையாளம் என நிறைய படங்களை தயாரித்து உள்ளனர்.

இவர்களுடைய முதல் தமிழ் படம் நாம் இருவர். பராசக்தி படம் மூலமாக நடிகர் திலகம் சிவாஜி அவர்களை அறிமுகப்படுத்தியது இவர்கள்தான், நம்ம உலக நாயகன் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று களத்தூர் கண்ணம்மாவில் இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தியதும் இவர்கள் தான்.


தேனாண்டாள் பிலிம்ஸ் (Thenandal Studios Limited (TSL))

இதனுடைய நிறுவனர் ராமநாராயணன். எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்குமே, நிறைய அம்மன் படங்களை இவர்கள் தயாரித்து இருக்கின்றனர். இவர்கள் எடுத்த முதல் தமிழ் படம் நாகம். 

இது 1975 வெளியானது.  சாமி படங்களை தயாரித்து வந்தவர்கள் அதற்க்கு எதிர்மறையாக அரண்மனை, காஞ்சனா, டிமாண்டி காலனி போன்ற பேய் படங்களுக்கு வெளியிட்டாளர்கள் ஆகவும் இருந்திருக்கின்றனர். சமீபமாக நம்ம இளைய தளபதியுடைய மெர்சல் படம் இவர்களுடைய தயாரிப்பில் தான் வந்தது.

ஆஸ்கார் பிலிம் (Aascar Films) 


இதனுடைய FOUNDAR V.ரவிச்சந்திரன். இவர்களுடைய முதல் படம் காதலுக்கு மரியாதை. இதில் துணை தயாரிப்பாளராக பணியாற்றியிருப்பார். வானத்தை போலே,பூவே உனக்காக போன்ற குடும்ப படங்களை தயாரித்து வந்த இவர்கள் சமீபமாக தசாவதாரம் அந்நியன், ஐ, விஸ்வரூபம் 2 போன்ற படங்களை தயாரித்து உள்ளனர்.

மாடர்ன் தியேட்டர் (Modern Theatres)

இதனுடைய நிறுவனர் வி.ஆர் சுந்தரம் முதலியார். இவர்கள் சமீபகாலமாக படங்கள் எடுக்கவில்லை என்றாலும் முதல் தமிழ் ரெட்டை வேட(Double Action) படம் உத்தமபுத்திரன் இவர்களுடைய தயாரிப்பில்  வந்ததுதான். 

அதேபோல தமிழில் வெளியான முதல் கலர் படம் அலிபாபாவும் 40 திருடர்களும் இதுவும் இவர்கள் தயாரிப்பில் வந்ததுதான்.



ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் (Raaj kamal Film international)


இவங்களோட முதல் படம் 1081 ல்  வெளியான ராஜபார்வை. தேவர்மகன், சதிலீலாவதி,அபூர்வசகோதர்கள் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இவர்கள் தயாரித்து இருக்கின்றனர். சமீபமாக இவர்கள் தயாரித்து வெளியான படம் கடாரம் கொண்டான்.

சன் பிக்சர்ஸ்(Sun Pictures)


இதனுடைய நிறுவனர் கலாநிதிமாறன். ஆரம்ப காலத்தில் நிறைய படங்களைக்கு விநியோகஸ்தராக(Distributor) இருந்திருக்கிறார் . தமிழ் படங்களில் அதிக பட்ஜெட் படமான எந்திரன் இவர்களில் தயாரிப்பில் வெளியானது. சர்கார், பேட்ட போன்ற வெற்றி படங்களை இவர்கள் தயாரித்து உள்ளனர். தலைவரோட அண்ணாத்த யும் தளபதியோட 65 ம் இவர்கள் தயாரிப்பில் வெளியாக உள்ளது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் (Redgiant Movies)


அடுத்து நாம பார்க்க போறது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இதனோட முதல் படம் குருவி 2008 வெளியானது.ஆரம்பத்தில்  மன்மதன் அன்பு, ஏழாம் அறிவு இப்படி பல ஹீரோக்களை வைத்து படம் எடுத்து வந்த இவர் அதற்க்கு பிறகு தானே இறங்கி பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

V CREATION 


இதனுடைய FOUNDAR கலைபுலி S தானு. காக்க காக்க, கிழக்கு சீமையிலே,ஆளவந்தான் சமீபமாக துப்பாக்கி,தெறி, கபாலி போன்ற வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்டனர். கடைசியாக இவர்கள் தயாரிப்பில் வெளிவந்த படம் அசுரன்.

ஸ்டுடியோ கிரீன் (Studio Green)


 இதனுடைய நிறுவனர் KE ஞானவேல்ராஜா.இவர் நடிகர் சிவகுமார் அவருடைய உறவினர். இவர்களின் முதல் படம் சில்லுனு ஒரு காதல்  2006ல் வெளியானது. சூர்யா கார்த்திக் இவர்களை வைத்து நிறைய படங்களை தயாரித்து உள்ளனர். குறிப்பாக சிங்கம்,பிரியாணி, மெட்ராஸ், கொம்பன், தற்போது திரைக்கு வரபோகின்ற நடிகர் சூர்யா படமான அருவாள் இவர்களுடைய தயாரிப்பில் தான் உருவாகிக்கொண்டிருக்கிறது. 

Click here to watch Video

சிலபேர் எனக்கு பிடித்த தயாரிப்பு நிறுவனம் வரவில்லையே, என்று நீங்கள் என்னலாம், இதனுடை மற்றொரு பகுதி வரவிருக்கும் கட்டுரையில் பார்ப்போம்.



ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட Hollywood படங்கள் (Best One Location Hollywood Movies)

  HOLLYWOOD MOVIES இதை பற்றி பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன, அவர்களுடைய திரைக்கதை, திட்டமிடுதல், தொழில்நுட்பம், புதுமை (Script,Creativit...